மேம்பாலம் கட்ட பூமி பூஜை
மேம்பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் யூனியன் வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும், சோரம்பட்டி கிராமத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குளியல் தொட்டியையும் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். மேலும் கட்டனார்பட்டி, விமுத்துலிங்காபுரம் சாலையில் ரூ. 1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கான பூமி பூஜையும் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், பஞ்சாயத்து தலைவர்கள் வி.முத்துலிங்காபுரம் ஹரி பாஸ்கர், கட்டனார்பட்டி ஈஸ்வரி முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், கற்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story