ரூ.10 கோடியில் போட்டி ேதர்வு பயிற்சி மைய கட்டிட பூமி பூஜை


ரூ.10 கோடியில் போட்டி ேதர்வு பயிற்சி மைய கட்டிட பூமி பூஜை
x
தினத்தந்தி 20 March 2023 12:30 AM IST (Updated: 20 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.10 கோடியில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி மைய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி ஊராட்சியில் ரூ.10 கோடி 15 லட்சத்தில் இலவச போட்டி தேர்வு பயிற்சி மைய கட்டிட பூமி பூஜை நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி மைய புதிய கட்டிடத்தில் வகுப்பறைகள், பயிற்சியாளர் அறை, ஆசிரியர் அறை, கணினி அறை, நூலகம், வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. மேலும் 1,000 பேர் அமரும் வகையில் கருத்தரங்கு கூடம், உணவு அருந்தும் அறை கட்டப்படுகிறது. பயிற்சி மைய கட்டிடம் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் மாணவ, மாணவிகள் நன்கு பயிற்சி பெற்று அரசின் உயர் அதிகாரிகளாக பதவி ஏற்பதற்கு வழி வகை செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., ஆர்.டி.ஓ.சிவகுமார், ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழு தலைவர் அய்யம்மாள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ், தாசில்தார் முத்துச்சாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கவேல், உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், முக்கிய பிரமுகர்கள் தங்கராஜ், தர்மராஜ், ஜோதீஸ்வரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story