திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பேட்டரி வாகனங்கள்


திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பேட்டரி வாகனங்கள்
x

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பேட்டரி வாகனங்களை தூய்மை பணி சிறந்து விளங்க செய்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஈக்காடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் 10 புதிய பேட்டரி வாகனங்கள் பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. முறையாக அவற்றை விநியோகம் செய்யாமல் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளதால் வெயில், மழையில் நனைந்தபடிபயன் பாடின்றி கிடைந்து வருகிறது. திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகத்தை ஓட்டி சென்று வீடுகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் 10 பேட்டரி வாகனங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீணாக பாழடைந்து கிடக்கிறது.

மேலும் இந்த பேட்டரி வாகனத்தின் அருகில் குப்பைகளை தரம் பிரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தொட்டிகள் அதேபோன்று திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே பேட்டரி வாகங்கள் மற்றும் குப்பைகளை தரம் பிரிக்க பயன்படும் பிளாஸ்டிக் தொட்டிகள் ஆகியவற்றை விரைந்து விநியோகித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி சிறந்து விளங்க செய்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story