அரசு பள்ளிக்கு ரூ.21 லட்சத்தில் அடிப்படை வசதி
காளையார்கோவிலில் அரசு பள்ளிக்கு ரூ.21 லட்சத்தில் அடிப்படை வசதி செய்துதரப்பட்டுள்ளது.
காளையார்கோவில்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய கிழக்கு அரசு தொடக்க பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மாணவர்கள் கோரிக்கையை ஏற்று அம்மையப்பர் குழுமத்தின் சார்பில் ரூ.21 லட்சம் செலவில் 8 கழிப்பறைகள், பகுதியளவு சுற்றுச்சுவர், பள்ளி வளாகம் முழுவதும் நடைபாதை கல் அமைத்து கொடுத்துள்ளனர். இப்பணிகள் முடிந்து பள்ளிக்கு அர்ப்பணிக்கும் திறப்பு விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ஆலீஸ் மேரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் அனைவரையும் வரவேற்றார். அம்மையப்பர் குரூப்பின் துணை தலைவர் அகஸைபாய் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பொது மேலாளர் சபேசன், மனித வள மேலாளர் ராஜசேகர், போக்குவரத்து மேலாளர் ராஜசிங்கம், பொறியாளர்கள் ராஜா, பொன்ராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பூமணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் பர்ஸ்ட் கார்மென்ட்ஸ் எம்.ஜி.எப்.(1) பிரைவேட் லிமிடெட் தலைவர் ஹரிதாஸ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
இதில் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் முத்துநகை, ஜோதி, விஜயரசி, தேவி, ரேணுகாதேவி, சாந்தி, செல்வி, கவிதா, ஷர்மிளா, அற்புதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.