மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவீதம் மானியத்தில் வங்கி கடன்


மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவீதம் மானியத்தில் வங்கி கடன்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதி மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவீதம் மானியத்தில் வங்கி கடன் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவி குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க 30 சதவீத மானியத்துடன் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் 10 சதவீதம் பயனாளிகளின் பங்களிப்பு 60 சதவீதம், வங்கிகடன் 30 சதவீதம், திட்டமானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில் கடன் வழங்கப்பட உள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண் தொழிலாகவும், ரூ.5 லட்சம் முதல் 15 லட்சம் வரையுள்ள தொழில் திட்டம் குறு தொழிலாகவும், ரூ.15 லட்சத்துக்கு மேல் உள்ளதொழில் திட்டம் சிறு தொழிலாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாக இருந்தால் போதும். மேலும் விவரங்களுக்கு திட்டம் செயல்பட கூடிய சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலகத்தை நேரில் அணுகி திட்ட விவரங்களை பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story