கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 23 பேரின் வங்கி கணக்கு முடக்கம்


கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 23 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் கட்டமாக கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 23 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 1 கார்- 4 மோட்டார் சைக்கிள்களை ஏலம் விட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு்ள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் கட்டமாக கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 23 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 1 கார்- 4 மோட்டார் சைக்கிள்களை ஏலம் விட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு்ள்ளார்.

23 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற நிஷா கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்த கஞ்சா 2.0 திட்டத்தின் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 60 பேரின் சொத்துக்களை பட்டியலிட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 23 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. 2-வது கட்டமாக 30 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளை முடக்க அறிவுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

வாகனங்களை ஏலம் விடவும் உத்தரவு

மீதமுள்ள கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் தனிப்படையினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா வியாபாரிகள் பயன்படுத்திய ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்களையும் ஏலம் விடவும், மீதமுள்ள கஞ்சா வியாபாரிகள் வாகனங்களையும் பறிமுதல் செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story