கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.10½ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்


கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.10½ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
x

கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.10½ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்

ஈரோடு

கடத்தூர்

கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.10½ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

வாழைத்தார்கள் ஏலம்

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு 7 ஆயிரத்து 190 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் கதலி (கிலோ) ரூ.48-க்கும், நேந்திரன் ரூ.30-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.400-க்கும், தேன்வாழை ரூ.580-க்கும், செவ்வாழை ரூ.780-க்கும், ரஸ்தாளி ரூ.580-க்கும், பச்சைநாடன் ரூ.400-க்கும், ரொபஸ்டா ரூ.360-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

தேங்காய்

இதைத்தொடர்ந்து தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 3 ஆயிரத்து 630 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் தேங்காய் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.8-க்கும், அதிகபட்சமாக ரூ.14.60-க்கும் என மொத்தம் ரூ.42 ஆயிரத்துக்கு விற்பனையானது.


Next Story