பாமக முற்றுகை போராட்டம் எதிரொலி: கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை


பாமக முற்றுகை போராட்டம் எதிரொலி: கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை
x
தினத்தந்தி 28 July 2023 1:07 PM IST (Updated: 28 July 2023 1:07 PM IST)
t-max-icont-min-icon

பாமக முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறுவதால் இன்று மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாமக கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மாலை 6 மணி வரை திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story