திருவள்ளூர் மாவட்டம் பவானி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
திருவள்ளூர் மாவட்டம் பவானி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, பாண்டரவேடு கிராமத்தில் பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 3-ம் ஆண்டு 108 பால்குடம் அபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் 108 பெண் பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்தபடி மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அதன் பிறகு நேற்று மாலை கோவிலில் மந்திரம் ஓதப்பட்டது. பின்னர் இரவில் ஹோமம் மற்றும் பவானி அம்மனுக்கு ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பாண்டரவேடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாண்டரவேடு கிராமத்தைச்சேர்ந்த ஊர்ப்பொதுமக்கள் சேர்ந்து ஏற்பாடு செய்தனர்.
Related Tags :
Next Story