பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்காக பாலாலய நிகழ்ச்சி
பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்காக பாலாலய நிகழ்ச்சி
பவானி
பவானியில் பிரசித்திபெற்ற செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக பாலாலய நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி வழிபாடு மற்றும் யாக சாலை பூஜைகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேற்று காலை 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் பாலாலயம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழுத் தலைவர் பிரபாத் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன், நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், தி.மு.க. வர்த்தக அணி துணைத்தலைவர் தவமணி, ஆடிட்டர் முருகேஷ் மற்றும் பி.என்.ஆர்.மனோகர், தினேஷ்குமார், சண்முகசுந்தரம், செல்லியாண்டி அம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சரவணன் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
கோவிலில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் 1½ ஆண்டுகளில் திருப்பணிகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திருப்பணிக்குழு தலைவர் தெரிவித்தார்.