தென்கரை வைகை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு விழா -பக்தர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தனர்

தென்கரை வைகை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு விழாநடநடந்தது. பக்தர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தனர்
சோழவந்தான்.
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது.இங்கு வருடந்தோறும் ஆராட்டு விழா சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு நேற்று அதிகாலை தென்கரை அய்யப்பன் கோவிலில் கண்ணன் பட்டர் தலைமையில் யாகபூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் பக்திபாடல்கள் பாடி ஆடி வந்தனர். வைகை ஆற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் அய்யப்ப சுவாமிக்கு பால், தயிர் உள்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்றது. வைகை ஆற்றில் அய்யப்பசுவாமி ஆராட்டுவிழா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமியே.. சரணம் அய்யப்பா.. என்று பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கரையிலுள்ள மண்டகப்படிக்கு அய்யப்ப சுவாமி எழுந்தருளியதும் சிறப்பு பூஜை நடந்தது. யானை வாகனத்தில் அய்யப்ப சுவாமி வலம் வந்து கோவிலை அடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, குருவிதுறை, காடுபட்டி, விக்கிரமங்கலம், ஊத்துக்குளி, சோழவந்தான் பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தென்கரை அய்யப்பன் கோவில் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.