மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நம்மால் முடியும் என்ற தலைப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நம்மால் முடியும் என்ற தலைப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கலந்துகொண்டு பேசினார். சிறப்பு பயிற்சியாளர் கிருஷ்ணராஜன் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை வழங்கினார். தேர்வு நுணுக்கங்கள் மற்றும் தொடர்ந்து மேற்படிப்புகள் மேற்கொள்வது குறித்து ஆசிரியர்கள் மாலதி, புவனேஷ்வரி, சரவணன், முத்துபிரபாகரன், லெட்சுமணன், பழனியப்பன், பிரபு, வெற்றிவேல் வரதராஜன், முத்துப்பாண்டி, கணேசன் ஆகியோர் பேசினர். இரண்டு நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.






