அரசு பள்ளி மாணவர்களுக்கு தூய்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு


அரசு பள்ளி மாணவர்களுக்கு தூய்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு தூய்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள சிலால் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு தூய்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் சாமிதுரை (அங்கராயநல்லூர்), சக்திவேல் (சிலால்) ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக சிலால் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபிநாதன் வரவேற்று பேசினார். ரோட்டரி சங்கம் அன்புராஜ், ரோட்டரி சங்கத் தலைவர் சுரேஷ்குமார், சங்க செயலாளரும், பி.எல்.ஆர் ஜவுளிக்கடை உரிமையாளருமான முருகன், பொருளாளர் கார்த்திகேயன், கிருபாநிதி ஆகியோர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் கொடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் தங்களது ஆடைகளை நன்றாக துவைத்த பின்பு பயன்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் உணவு சாப்பிடும் முன் ஒவ்வொருவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மழைக்காலம் நெருங்கி விட்டதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் பள்ளியில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளுக்கான இரண்டு வெவ்வேறு நிறக் கூடைகளை மாணவர்களிடையே கொடுத்து, குப்பைகளை தரம் பிரித்து அதில் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது.


Next Story