எஸ்சி, எஸ்டி பிரிவு பணியாளரை நியமிக்கும் போது கவனம் தேவை - சென்னை ஐஐடி நிர்வாகம் கருத்தால் சர்ச்சை


எஸ்சி, எஸ்டி பிரிவு பணியாளரை நியமிக்கும் போது கவனம் தேவை - சென்னை ஐஐடி நிர்வாகம் கருத்தால் சர்ச்சை
x

எஸ்சி, எஸ்டி பிரிவு பணியாளரை நியமிக்கும் போது கவனம் தேவை என்ற சென்னை ஐஐடி நிர்வாகத்தின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

எஸ்சி, எஸ்டி பிரிவு பணியாளர்கள் நியமனத்தின் போது கவனமாக இருப்பதுடன் தரத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற சென்னை ஐஐடி நிர்வாகத்தின் அறிவுறுத்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடியில் ஆசிரியர்கள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவது இல்லை என்று ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவு பணியாளர்கள் நியமனத்தின் போது கூடுதல் கவனம் தேவை என்று தேர்வுக்குழுவுக்கு ஐஐடி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஐஐடியின் தரத்தை தொடர்ந்து கடைபிடிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும் என்றும் நியமனத்திற்குப் பிறகு அவர்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் பணி நியமனம் தொடர்பான இந்த கருத்து சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு தலை தூக்குகிறதோ என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.


Next Story