அத்திக்கடவு-அவினாசி திட்டம்பிப்ரவரி 15-ந் தேதி பயன்பாட்டுக்கு வரும்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


அத்திக்கடவு-அவினாசி திட்டம்பிப்ரவரி 15-ந் தேதி பயன்பாட்டுக்கு வரும்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x

அத்திக்கடவு-அவினாசி திட்டம் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பயன்பாட்டு்க்கு வரும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

பவானி

அத்திக்கடவு-அவினாசி திட்டம் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பயன்பாட்டு்க்கு வரும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

சோதனை ஓட்டம்

பவானி காலிங்கராயன்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் 99.99 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இன்னும் 200 மீட்டருக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டியது உள்ளது. அதே போல் 2 அல்லது 3 இடங்களில் குழாய்களை இணைத்து கான்கிரீட் போட வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் ஜனவரி மாதத்திற்குள் முடிவடைந்த பிறகு 10 நாட்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

தயார்

இந்த சோதனை ஓட்டத்தின் போது நிறுவப்பட்டுள்ள 6 நீரேற்று நிலையங்கள் மூலம் 106 கிலோமீட்டர் தொலைவிற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

இதன் மூலம் மொத்தம் 1,045 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக குழாய்கள் இணைக்கப்பட்டு தண்ணீர் வசதி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 750 குளங்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

பயன்பாட்டுக்கு வரும்

மேலும் வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் முறைப்படி அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும். விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைப்பார்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

அப்போது அமைச்சருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோசினி சந்திரா மற்றும் வருவாய் அதிகாரிகள் மற்றும் அத்திக்கடவு-அவினாசி திட்ட பொறியாளர்கள், விவசாயிகள், தி.மு.க.வினர் சென்றனர்.


Next Story