திருச்செந்தூரில் 60 அடிக்கு உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் 60 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்கின்றனர். ஆவணி தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்செந்தூரில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 60 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின. அவற்றின் மீது நின்று பக்தர்கள் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கிவிட்டு, பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story