திருச்செந்தூர் காஞ்சி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா


திருச்செந்தூர் காஞ்சி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 3:22 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் காஞ்சி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறனை வளர்த்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக 'வாய்ப்புகளே வாழ்க்கை படிகள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் பெற்றுக்கொண்டார். விழாவில், தூத்துக்குடி ராஜலெட்சுமி கலை கல்லூரி முதல்வர் நாஞ்சில் ராஜதுரை நூல் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜபாண்டி, பள்ளி முதன்மை முதல்வர் செல்வ வைஷ்ணவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நூலாசிரியர் கார்த்தீசன் ஏற்புரை ஆற்றினார். பின்னர் பள்ளி மாணவர் வாசகர் வட்டம் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில், வக்கீல் பிரகாஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story