கோத்தகிரி: ஆவின் பால் பாக்கெட்டுகள் நன்கு ஒட்டப்படாததால் பால் கசிந்து வீணாகும் அவலம்
கோத்தகிரி பகுதிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் நன்கு ஒட்டப்படாததால் பால் கசிந்து வீணாகி வருவதாக முகவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோத்தகிரி:
அரசுக்கு சொந்தமான ஊட்டி ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் இருந்து கோத்தகிரி பகுதியில் உள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதில் பால் பாக்கெட்டுகள் தினம்தோறும் காலை நேரத்தில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி பகுதிக்கு கொண்டு ஆவின் பால் வாகனம் மூலமாக கொண்டுச் சென்று விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பால் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் முறையாக ஓட்டபடாததால் பால் கசிந்து வீணாகி வருவதாகவும், இதனால் முகவர்களான தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் பால் கசியாத வகையில் பாக்கெட்டுகளை நன்கு ஒட்டி விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story