ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவருக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவருக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி
x

ஆர்காடு சுரேஷின் கூட்டாளியான திருமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உட்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பூவிருந்தவல்லி தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story