தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்


தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்
x

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், கால சம்காரமூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள். இந்தநிலையில் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை மற்றும் ஹோமங்கள் செய்ய வேண்டும் என கோவில் கண்காணிப்பாளரிடம் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கலியபெருமாள் கோரிக்கை மனு கொடுத்தார். அப்போது அவருடன் கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.



Next Story