நீலகிரிக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்


நீலகிரிக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்
x
தினத்தந்தி 2 July 2023 11:15 PM IST (Updated: 3 July 2023 1:50 PM IST)
t-max-icont-min-icon

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் நீலகிரி விரைந்தனர்.

ராணிப்பேட்டை

தென்மேற்கு வங்க கடல் பகுதியின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை வேண்டுகோளுக்கிணங்க அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணை கமாண்டன்ட் பிரவின் பிரசாத் தலைமையில் நீலகிரி மாவட்டத்திற்கு 40 வீரர்கள் அதி நவின மீட்பு கருவிகளுடன் நேற்று விரைந்து சென்றனர்.


Next Story