தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Feb 2024 4:32 PM IST (Updated: 18 Feb 2024 4:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது.

சென்னை,

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் தமிழக மீனவர்களை மீட்கவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன்.

இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி, நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம். ஏனென்றால், அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story