நெருங்கும் பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


நெருங்கும் பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கவிருப்பதால் மழைக்காலத்திற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

அப்போது, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள், சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டிய பணிகள் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும் என்றும், மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்து அவற்றில் தங்கு தடையின்றி மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் சாலைகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்திரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் டாக்டர் ஆர்.செல்வராஜ், திட்ட இயக்குநர் எஸ்.ஏ.இராமன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story