120 பேருக்கு பணிநியமன ஆணை


120 பேருக்கு பணிநியமன ஆணை
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 120 பேருக்கு பணிநியமன ஆணையை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ் நாடு அரசின் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் நாராயணசாமி, கமலவல்லி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக கலந்து கொண்ட உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்க்காணல் நடத்தி தேர்வு செய்தனர். இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வேலைக்காக தேர்வு செய்யப்பட்ட 120 பேருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். முகாமில் நகரமன்ற உறுப்பினர்கள் கலா, ரமேஷ்பாபு, நிர்வாகி ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story