"இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது கலைஞர் நீட்டிப் பிடித்த நெருப்பு" - கவிஞர் வைரமுத்து


இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது கலைஞர் நீட்டிப் பிடித்த நெருப்பு - கவிஞர் வைரமுத்து
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Aug 2023 9:49 AM IST (Updated: 7 Aug 2023 10:23 AM IST)
t-max-icont-min-icon

இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது கலைஞர் கருணாநிதி நீட்டிப் பிடித்த நெருப்பு என்று கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

இந்த நிலையில், கருணாநிதி நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் புகழஞ்சலி தெரிவித்துள்ளார். அதில், " சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன. கலைஞர் ஒரு தத்துவம். இன்று இருமொழிக் கொள்கை என்ற தத்துவம். தாய்மொழிக் காப்பு என்ற கேடயமாகவும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற ஈட்டியாகவும் இந்த நிமிடம் கலைஞர் வாழ்கிறார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு; அணைய விடாதீர் நெருப்பை அரிப்பதில்லை கரையான்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story