மெட்ரோ ரெயில் சேவை நாளை கூடுதலாக இயக்கப்படும் என அறிவிப்பு


மெட்ரோ ரெயில் சேவை நாளை கூடுதலாக இயக்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2023 8:50 PM IST (Updated: 30 Oct 2023 9:04 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மெட்ரோ ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை நாளை 31-ந்தேதி காலை 10.18 மணி முதல் மதியம் 2.45 மணி வரையில் நிறுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது. கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை நாளை 31-ந்தேதி மட்டும் இயக்கப்படும்.

விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடவெளியில் இயக்கப்படும். அதே போல, ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் முதல் சென்னை சென்டிரல் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

அதேப்போல, சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story