ரத்த சோகை விழிப்புணர்வு முகாம்
தேனி நாடார் சரசுவதி கலை கல்லூரியில் ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கம், தேனி மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, மகளிருக்கான ரத்த சோகை விழிப்புணர்வு, கண்டறிதல் மற்றும் தொடர் சிகிச்சை முகாம் நடந்தது. விழாவில், தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்துகொண்டு பேசினார். மேலும் விழாவில் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் மீனாட்சிசுந்தரம், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளாதேவி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்க தலைவி அமலாதேவி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். விழாவில், கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் பலர் கொண்டனர். முகாமில் கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் கோமதி, சுசிலா சங்கர், சரண்யா மற்றும் பேராசிரியைகள் செய்திருந்தனர். முடிவில் டாக்டர் வனிதா ருக்மணி நன்றி கூறினார்.