அமெரிக்காவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு
x

கியூபாவை சேர்ந்த அகதிகள் 15 பேர் சட்டவிரோதமாக படகில் பயணம் செய்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்குள் நுழைந்தனர்.

வாஷிங்டன்,

தென்அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் கியூபாவை சேர்ந்த அகதிகள் 15 பேர் சட்டவிரோதமாக படகில் பயணம் செய்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்குள் நுழைந்தனர்.

அகதிகளின் படகு புளோரிடா கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமெரிக்க கடலோர காவல்படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் அதற்குள் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 5 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். America, refugee boat, Refugee boat capsizes in US


Next Story