'தினத்தந்தி' செய்தி எதிரொலியாககழுகுமலையில் பாலம் கட்டும் இடத்தில் மாற்றுப்பாதை சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலியாககழுகுமலையில் பாலம் கட்டும் இடத்தில் மாற்றுப்பாதை சீரமைப்பு
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM (Updated: 13 Oct 2023 6:45 PM)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாககழுகுமலையில் பாலம் கட்டும் இடத்தில் மாற்றுப்பாதை சீரமைக்கப்பட்டது.

தூத்துக்குடி

கழுகுமலை:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கழுகுமலையில் பாலம் கட்டும் இடத்தில் மாற்றுப்பாதை சீரமைக்கப்பட்டது.

சேறும் சகதியுமான மாற்றுப்பாதை

கழுகுமலை- அத்திப்பட்டி சாலையில் ஆறுமுகம்நகர் பகுதியில் சேதமடைந்த பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அதன் அருகில் தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

சீரமைப்பு

இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஆறுமுகம்நகரில் புதிய பாலம் கட்டும் இடத்தின் அருகில் உள்ள மாற்றுப்பாதையில் சரள் மண் கொட்டி, பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்தனர். மேலும் புதிய பாலம் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

1 More update

Next Story