மயான சாலையில் பாலம் அமைக்க ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு
முதுகுளத்தூரில் மயான சாலையில் பாலம் அமைக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் வார்டு நம்பர் 13 தெற்கு தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயானத்திற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். சாலை குண்டும்-குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுவதால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதுகுறித்து பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் முதுகுளத்தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 3 சிறிய பாலம் அமைக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் நிதி ஒதுக்கீடு செய்தார். கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் நன்றி தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று பாலம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் சார்பாக முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சக்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித், மணிகண்டன் முன்னாள் கவுன்சிலர் சீனி முகம்மது வாவா ராவுத்தர் உள்பட பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் பலர் கலந்து கொண்டனர்.