மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்
மதுரை எய்ம்ஸ் தலைவராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு 2015 பிப்.28-ம் தேதி அறிவித்தது. பல்வேறு இழுபறிக்குப் பிறகு, மருத்துவமனை அமைக்க 2018-ல் மதுரை தோப்பூர் தேர்வானது. 2019 ஜன.27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் பணிகள் தொடங்கி, 2028-ம் ஆண்டில்தான் முடிவடையும் என்று ஜப்பான் நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமன் ஜனவரி மாதம் காலமான நிலையில் மதுரை எய்ம்ச் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.