அகல் விளக்குகள் விற்பனை மும்முரம்
அருப்புக்கோட்டையில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா
கார்த்திகை தீபத்திருவிழா இன்று(செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முக்கிய இடத்தை அகல் விளக்குகள் பிடிக்கின்றன. அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வீட்டை அலங்கரிப்பது வழக்கம். இந்தநிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எண்ணற்ற வியாபாரிகள் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தங்களது கடைகளில் அகல்விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
அகல் விளக்குகள்
பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைகளுக்கு சென்று அகல் விளக்குளை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
கார்த்திகை அகல் விளக்கு ரூ.2 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் ஒரு சில அலங்கார விளக்குகள் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு தேவையான விளக்குகளை வாங்கி செல்கின்றனர்.
இன்று (செவ்வாய்கிழமை) கார்த்திகை திருவிழா என்பதால் நேற்று காலை முதல் விற்பனை தீவிரமாக நடந்தது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மெழுகுவர்த்தி விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.