21 நாட்களுக்கு பிறகு தொடங்கியது ஊட்டி மலை ரெயில் சேவை
மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் வந்திருந்தனர்.
நீலகிரி,
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வந்தது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து, சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ரெயிவே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ரெயில்வே பாதை சரி செய்யப்பட்ட நிலையில் 21 நாட்களுக்கு பிறகு ரெயில் சேவை இன்று காலை தொடங்கியது. மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.மேலும் ரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story