எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பெரம்பலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு பெரம்பலூரில் அக்கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அவர்கள் பொியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களை வாழ்த்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் கட்சியின் கொடியை ஏற்றி, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதில் கட்சியின் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மருதராஜா, கட்சியின் மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பூவை.செழியன், அவைத் தலைவர் குன்னம் குணசீலன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் எம்.என்.ராசாராம், துறைமங்கலம் சந்திரமோகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவில் வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் எம்.ஜி.ஆர். திடலில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்த அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கட்சியின் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா, கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாச்சலம், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.