அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக நிர்வாகிகளுக்கு, அவர் ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். அதை மேலும் அதிகரிக்க வேண்டும். இதற்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் வேணுகோபாலு, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, யாகப்பன், சுப்பிரமணி, முருகானந்தம், மாரியப்பன், முத்துசாமி, பொன்னுத்துரை, சந்திரமோகன், மோகன், பாண்டி, சுப்பிரமணி, சின்னச்சாமி, மயில்சாமி, நல்லதம்பி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முத்தையா, பேரூர் செயலாளர்கள், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story