மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு


மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
x

மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்தபோது, வேலூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், அதற்கான மூலப்பத்திரத்தை காட்ட முடியுமா? என்றும் பேசினார்.

அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி, அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story