ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்


ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
x

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

ஆசிரியர் பணியிடங்கள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் 34 பணியிடம், பட்டதாரி ஆசிரியர் 10 பணியிடம் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் 10 பணியிடம் என மொத்தம் 54 பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப படவுள்ளது.

காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தொகுப்பூதிய முறையில்

மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படவுள்ள பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு 15 ஆயிரம் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு 18 ஆயிரம் வீதம் மாத தொகுப்பூதியமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வி தகுதி: ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (TET) இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளி அமைந்துள்ள அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வி தகுதி: முதுகலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

13-ந்தேதிக்குள்

இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் மட்டுமே தற்காலிக பணிநியமனம் செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களை அணுகி தெரிந்து அந்தந்த பணியிடகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தினை உரிய கல்வி தகுதிசான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு முகவரியிட்டு கீழ்கண்ட முகவரிக்கு வருகிற 13-ந்தேதி மாலை 5.45 க்குள் ஒப்படைக்கலாம்.

முகவரி: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மாவட்ட கலெக்டர் அலுவலகம்,செங்கல்பட்டு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story