பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் உரிய வசதி: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் ,
தமிழ்நாடு முழுவதும் 3,58,201 மாணவர்கள், 4,13,998 மாணவிகள், ஓரு திருநங்கை என மொத்தம் 7,72,200 பேர் எழுதுகின்றனர் . 154 வினாத்தாள் மையங்களும், 101 விடைத்தாள் சேமிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பாளர் 43,200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் .
தேர்வு மையங்களில் தேர்வு சார்ந்த உரிய அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியமாக எழுத வேண்டும். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story