கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி


கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
x
தினத்தந்தி 17 May 2023 3:03 PM IST (Updated: 17 May 2023 3:03 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்

நெல்லை,

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வேளாண் கல்லூரி பயின்ற மாணவர்கள் எந்தவித தடையும் இல்லாமல் தமிழக அரசால் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மருத்துவக் கல்லூரி படித்து திரும்பிய மாணவ- மாணவிகளுக்கு அவ்வாறு இல்லை. இங்கு நீட் தேர்வில் இருப்பதால் மத்திய அரசிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். விரைவில் அவர்களும் படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும்.

கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை . சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். .இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story