குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலை மீட்டுவர நடவடிக்கை அவசியம் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
தமிழர்களுக்கு பிரச்சினை என்றால், இந்தியத் தூதரகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஓட்டகம் மேய்க்க மறுத்ததால் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, முத்துக்குமரன் உடலை மீட்டுவர நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கண்ணியமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக வெளியுறவுத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழர்களுக்கு பிரச்சினை என்றால், இந்தியத் தூதரகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
அங்கு தமிழர்கள் இறந்தாலும், உடலை மீட்டுவருவதிலும் அலட்சியம் நிலவுகிறது. இந்தப் போக்கை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.