தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இதுநாள் வரையிலும் மாநகராட்சியின் அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைத்துள்ளோர் 3 நாட்களுக்குள் உரிய பாதுகாப்புடன் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும்.
தவறினால் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன், அதற்குரிய செலவுத்தொகை உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story