வேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து - கட்டுமான மேற்பார்வையாளர்கள் கைது


வேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து - கட்டுமான மேற்பார்வையாளர்கள் கைது
x

மழையின்போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள பள்ளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடந்த திங்கட்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே கட்டிடப் பணிக்காக தோண்டப்பட்ட 50 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதில் 8 பேர் சிக்கிய நிலையில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால், 2 பேர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பங்க் ஊழியர் நரேஷின் உடல் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் ஒருவர் இந்த பள்ளத்தில் சிக்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் கட்டுமான பணியின்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக அதன் மேற்பார்வையாளர்கள் எழில் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story