சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்


சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்
x

கோப்புப்படம் 

மின்சார ரெயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரெயில் சேவை. குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை கொடுப்பதால் அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது. அந்த வகையில், மின்சார ரெயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு 12 ஏ.சி. EMU பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தட மின்சார ரெயில்களில் ஏ.சி, பெட்டிகளை இணைக்க வாய்ப்புள்ளது.

1 More update

Next Story