பௌர்ணமி நாளையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் நடைபெற்ற ஆரத்தி எடுக்கும் நிகழ்வு
வடமாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்த ஆரத்தி நிகழ்வு, இன்று தமிழகத்தில் முதல் முறையாக திருச்செந்தூரில் நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கங்கை நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போன்று தமிழகத்தில் முதல் முறையாக திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் இன்று கடலுக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வடமாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த ஆரத்தி நிகழ்வு, இன்று தமிழகத்தில் முதல் முறையாக திருச்செந்தூரில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வின் போது கடலுக்கு பால், மஞ்சள், விபூதி உள்பட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story