விளை நிலத்தில் வழிபாடு


விளை நிலத்தில் வழிபாடு
x
தினத்தந்தி 3 Aug 2022 4:31 PM (Updated: 3 Aug 2022 4:36 PM)
t-max-icont-min-icon

விளை நிலத்தில் வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளில் தண்ணீர் செல்வதால் ஆடிப்பெருக்கு விழா களை கட்டியது. நாகையை அடுத்த பாலையூர் கிராமத்தில் சுமங்கலி பெண்கள், இளம்பெண்கள், புதுமண தம்பதிகள் குறுவை நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ள விளைநிலத்தில் உள்ள வாய்க்கால் கரையில் வழிபாடு நடத்தி ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடினர். அப்போது சுபகாரிய தடைகள், வருமானம் பெருகுவதில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்க வேண்டி காவிரி தாயை வணங்கினர். மேலும் தண்ணீர் பஞ்சம் இன்றி விவசாயம் செழிக்கவும் வேண்டி கொண்டனர்.கல் உப்பு, குண்டு மஞ்சள், வாழைப்பழம், பேரிக்காய், கொய்யாபழம், ஆப்பிள், தேங்காய், ரோஜா, மல்லிகை, சாமந்தி பூ, மஞ்சள் கயிறு ஆகியவற்றை படையல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். பின்னர் சுமங்கலிகள், இளம்பெண்களுக்கு குங்குமம் கொடுத்து கழுத்தில் மஞ்சள் கயிறு அணிவித்தனர். ஆண்களுக்கு கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். மேலும் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிவித்தனர்.



Next Story