குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை
வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானை நுழைந்தது.
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் ஒரு காட்டுயானை நுழைந்தது. இதனால் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கூச்சலிட்டு காட்டுயாைனையை விரட்டினர். ஆனாலும் அந்த யானை, குடியிருப்பு பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்த பலா, கொய்யா மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றது. அந்த யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்ைக விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story