பள்ளிக்கூட சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை


பள்ளிக்கூட சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 29 Sept 2023 2:00 AM IST (Updated: 29 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்துறை அருகே பள்ளிக்கூட சுற்றுச்சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது

கோயம்புத்தூர்

ஆலந்துறை


கோவை அருகே ஆலந்துறையை அடுத்த முட்டத்துவயல் ஆதி வாசி கிராமத்தில் பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிக்க உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கூடம் வனப்பகுதியில் இருப் பதால் வன விலங்குக ளின் நடமாட்டம் அடிக்கடி காணப்படும். எனவே பள்ளிக்குள் வன விலங்குகள் புகாமல் தடுக்க பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.


இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானை ஒன்று உண்டு உறைவிட பள்ளி பகுதிக்கு வந்தது. பின்னர் அது பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது.

இதையடுத்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களுக்கு சமைப்பதற்காக ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை ருசித்து சாப்பிட்டது.


இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டு யானை யால் பள்ளியின் சுற்றுச்சுவர் இடித்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் எளிதாக பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே இடிந்த தடுப்பு சுவரை உடனடியாக மீண்டும் கட்டித்தர வேண்டும் என்றனர்.



Next Story