அண்ணாநகரில் ரூ.1½ கோடி வரி பாக்கி வைத்திருந்த ஆஸ்பத்திரியில் எச்சரிக்கை பேனர் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி


அண்ணாநகரில் ரூ.1½ கோடி வரி பாக்கி வைத்திருந்த ஆஸ்பத்திரியில் எச்சரிக்கை பேனர் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
x

அண்ணாநகரில் ரூ.1½ கோடி வரி பாக்கி வைத்திருந்த ஆஸ்பத்திரியில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை பேனர் வைத்து விட்டு சென்றனர்.

சென்னை

சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பிரபல நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள் முறையாக சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்படி அந்த கட்டிடங்களில் சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவிப்பு பேனர் வைத்து எச்சரித்து வருகின்றனர். அதன்படி அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரி அந்த கட்டிடத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு ரூ.1 கோடியே 65 லட்சம் வரி பாக்கி வைத்திருப்பது தெரிந்தது. பாக்கியை செலுத்தும்படி மண்டல அதிகாரிகள் சார்பில் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு முறைப்படி பலமுறை நோட்டீஸ் வழங்கியும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அண்ணா நகர் மண்டல வருவாய் அலுவலர்கள் தலைமையில் வந்த மாநகராட்சி ஊழியர்கள், அந்த ஆஸ்பத்திரி கட்டிடத்துக்கு வரி பாக்கி தொகை எவ்வளவு உள்ளது? என்பதை குறிப்பிட்டு நேற்று எச்சரிக்கை பேனர் வைத்து விட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story