சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஆபத்தான முறையில் சாயும் நிலையில் காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மர்


சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஆபத்தான முறையில் சாயும் நிலையில் காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மர்
x

திருத்தணியில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஆபத்தான முறையில் சாயும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட அரக்கோணம் சாலையில் கடைக்காரர்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகியது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்தது. இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் அரக்கோணம் சாலையில் விரிவாக்கம் செய்வதற்கு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றி சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சாலை விரிவாக்க பணியின் போது சாலையின் நடுவில் இருந்த 2 டிரான்ஸ்பார்ம்களை சுற்றி பள்ளங்கள் தோண்டப்பட்டதால், மின்கம்பம் பிடிமானம் இல்லாமல் சாயும் நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது கீழே விழுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை சீரமைக்க திருத்தணி மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story