திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரெயில் இயக்க வேண்டும்


திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரெயில் இயக்க வேண்டும்
x

மயிலாடுதுறையில் இருந்து நாள்தோறும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

மயிலாடுதுறையில் இருந்து நாள்தோறும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

காரைக்குடிக்கு ரெயில்

மயிலாடுதுறையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் காலை 8 மணிக்கு திருவாரூர் வந்தடைகிறது. பின்னா் இந்த ரெயில் திருவாரூரில் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 8:25 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு காரைக்குடியை நோக்கி செல்கிறது.மறு மார்க்கத்தில் மாலை 4 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருவாரூர் வந்தடையும் இந்த ரெயில் சுமார் 50 நிமிடங்கள் திருவாரூரில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இரவு 8.20 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது.

பயணிகள் அவதி

இரவு 7.30 மணிக்கு திருவாரூருக்கு வரும் இந்த ரயில் திருவாரூரில் சுமார் 1 மணி நேரம் வரை நிறுத்தப்படுவதால், பயண நேரம் அதிகமாகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே பயணிகளின் நலன் கருதி இந்த ரெயிலை திருவாரூரில் வீணாக சுமார் 1 மணி நேரம் நிறுத்தி வைக்காமலலும் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி வரை ஒரே வண்டியாக இயக்க வேண்டும். மேலும் இந்த ரெயில் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த ரெயில் இயக்கப்படுவதில்லை.

நாள்தோறும் இயக்க கோரிக்கை

வாரத்தின் 7 நாட்களிலும் இந்த ரெயிலை இயக்கினால் திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, பகுதியில் உள்ள பயணிகள் மிகவும் பயன்பெறுவார்கள்.எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை- காரைக்குடி ரெயிலை நாள்தோறும் இயக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story